Wednesday, September 5, 2012

லட்சுமி குபேர பூஜை

<ஸ்ரீ என்பது லட்சுமியை குறிக்கும், வைகுண்டத்தில் மகாலட்சுமியாக, பாற்கடலில் ஸ்ரீதேவியாக, இந்திரனுடைய இடத்தில் சுவர்க்க லட்சுமியாக, அரசர்களிடத்தில் ராஜலட்சுமியாக, குடும்பத்தில் கிரக லட்சுமியாக, வீரர்களிடத்தில் தைரிய லட்சுமியாக, பசுக்களிடத்தில் காமதேனுவாக சகல யோகங்களை வாரி வழங்கும் ஆதார சக்தியான லட்சுமிதேவிக்கு உகந்த நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது. இந்நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானது. தீராத வியாதியுள்ளவர்கள் ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து தங்களுக்கு தெரிந்த மந்திரம் அல்லது நாம ஜெபம் செய்து படுப்பதால் வியாதிகள் தீரும். கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் படுக்கும் தலையணையின் அடியில் ஆல இலையை வைப்பதால் திருஷ்டி, பாலாரிஷ்ட தோஷங்கள் கழியும். சகல தடைகள், இடர்பாடுகள், எதிர்ப்புகளையும் அழித்து வளமும் நலமும் தரும் மிருத்யுஞ்ஜய மந்திர ஹோமத்தை வீட்டில் செய்யலாம். வாழ்வு வளமும் பெற தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். ஆடை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும், தயிர் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். இனிப்பு வழங்குவதால் திருமணத் தடை நீங்கும். அரிசி, பருப்பு, தானியங்கள் தருவதால் விபத்துக்கள் நேராமல் இறைவன் காத்தருளுவார். பசுக்கள், பட்சிகள், நாய்களுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும். தர்ம குணம் மேலோங்கும்.

No comments:

Post a Comment