Wednesday, September 5, 2012

திவசம் செய்வது எப்படி?

தலைவாசல் படிக்கு மாவிலை தோரணம் கட்டி மஞ்சள் குங்குமம் இடவும். * பூஜை அறையை தயார்படுத்தவும், பித்தளை பொருட்களுக்கு மஞ்சள் குங்குமம் இடவும். * தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறை பெயரை அறியவும். * வாசலில் கால் அலம்ப வாளியில் நீர் மற்றும் சொம்பு வைக்கவும். * பூஜையின் போது பாதுகாப்பை முன்னிட்டு பாலியஸ்டர் துணிகளை உடுத்த வேண்டாம். * பூஜையின் போது பாரம்பரிய, கலாச்சார பருத்தி, கதர், பட்டாடைகளை உடுத்தவும். * தேவையான சில்லரை காசுகள் மற்றும் பட்டியலில் உள்ள பொருட்களை தயாராக வைக்கவும். * காய்கறிகள் (அகத்திகீரை நீங்கலாக) வசதிக்கேற்ப ஒற்றப்படையில் தானம் செய்தல் நன்று. * மறைந்தவருக்கு பிடித்த காய்கறிகள், பழங்கள் தானம் செய்தல் நன்று. * பூசணி, கீரை, வாழைப்பழத்தை பிளாஸ்டிக் பையில் வைக்கவேண்டும். * மறைந்தவர் படத்தை சுத்தம் செய்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து சந்தனம், குங்குமம் இடவும். படத்திற்கு துளசி மாலை, வில்வ மாலை சாற்றுவது நல்லது. * மரமணை வைத்து அதில் அவர் பயன்படுத்திய துணி நகை, கண்ணாடி வைக்கவும். * 2 குத்து விளக்கு (ஒரு முகம் ஏற்றவும்) மறைந்தவருக்கு பிடித்த இனிப்பு, காரம், பழங்கள் வைக்கவும். * தங்கள் குலவழக்கப்படி முழு தலைவாழையிலை படையில் போடவும். * ஓட்டலில் உணவு ஏற்பாடு செய்திருந்தாலும் படையலுக்காக வீட்டில் சர்க்கரை பொங்கள் செய்யவும். * கோதுமை தவிடு-2 கிலோ, அகத்திகீரை, வெல்லம் -1 கிலோ, வாழைப்பழம் 3 ஆகியவற்றை கலந்து முந்திய நாளே ஊற வைத்து தெவசம் அன்று காலையில் பசுவிற்கு தானம் செய்யவும். * அன்றைய தினம் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு ஒரு வேளை உணவிற்கு ஏற்பாடு செய்யலாம். அது பெரிய புண்ணியமாகும்.

No comments:

Post a Comment