Monday, September 3, 2012

வைராக்கியம் அவசியம்

தேவர்களும் அசுரர்களும் ஒருவருக்கொருவர் யுத்தம் செய்த புராணக்கதை சாந்தோக்ய உபநிஷத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு உரை எழுதிய ஆதிசங்கரர், ""தேவ அசுர யுத்தம் உலகம்தோன்றிய காலம் முதலே, எல்லா உயிர்களிலும் நடந்து கொண்டிருக்கிற போராட்டம் தான்'' என்று குறிப்பிட்டுள்ளார். உலக இன்பங்களை அடைய நம்மைத் தள்ளுகின்ற குணங்கள் அனைத்தும் அசுரத்தன்மை கொண்டவை. இந்த <இன்பங்களை வெறுக்க நம்மை நெறிப்படுத்துகின்ற நல்ல பண்புகள் எல்லாம் தேவகுணம். தேவ, அசுரகுணங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றன. இரண்டுக்கும் நடக்கும் போராட்டத்தில் பெரும்பாலும் ஜெயிப்பது அசுரகுணம் தான். இந்த குணத்தை ஜெயிக்க விடாமல் தடுப்பதற்கு வைராக்கியம் அவசியம் என்று பகவத்கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்திருக்கிறார்.

No comments:

Post a Comment