Wednesday, October 3, 2012

8+12+6=26

இது பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனுக்குரிய பெரிய கணக்கு. விஷ்ணு காயத்ரியில் நாராயண மந்திரம், வாசுதேவ மந்திரம், விஷ்ணு மந்திரம் ஆகிய மூன்று மந்திரங்கள் உள்ளன. இதில் நாராயண மந்திரம் என்பது "ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரம் (ஓம் என்பது ஒரே எழுத்து). வாசுதேவ மந்திரத்தில் 12 எழுத்துக்கள் உள்ளன. "ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்பது அந்த மந்திரம். விஷ்ணு மந்திரம் என்பது "ஓம் விஷ்ணவே நம' என்ற ஆறெழுத்து உடையது. ஆக, இவற்றின் கூட்டுத்தொகை 26. விஷ்ணு காயத்ரியில் இவை எல்லாம் சேர்த்து 26 எழுத்துக்கள் உள்ளன. ""நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்'' என்பது இந்த மந்திரம். (சமஸ்கிருதத்தில் எழுத்துக்களை தனித்தனியாக எண்ணக்கூடாது. சில சேர்ந்து வரும்). இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. புரட்டாசி சனியன்று இந்த எளிய மந்திரங்களை மனச்சுத்தத்துடன் சொன்னால் பெருமாளின் பூரண அருள் கிடைக்கும்.

No comments:

Post a Comment