Monday, October 1, 2012

அமைதிப்படுத்தும் தியானம்

ஆழ்ந்த தியானத்தில் மனமானது ஒழுகும் எண்ணெயை போன்று தொடர்ந்து ஒரு நிலையில் இருக்கும். -பதஞ்சலி முனிவர் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்வதை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும், மேலும் தியான நேரத்தை ஒழுங்காக கடைபிடிக்கவும் வேண்டும். தியானம் நமது மனதை அமைதிப்படுத்தி சஞ்சலமற்ற தன்மையை உருவாக்குகிறது. ஒரு மணி நேரம் ஆழ்ந்து தியானித்தால், அந்த தியானத்தின் மூலம் மனதில் ஏற்படும் பதிவு மீதமுள்ள 23 மணி நேரமும் பயன் அளிக்கும், மனம் அமைதியாக ஒரே நிலையில் இருக்கும் . படிப்படியாக தியானத்தின் அளவைக் கூட்ட வேண்டும் "தியானம்" நமக்குள் இருக்கும் பல்வேறு திறமைகளை அதிகரித்து குறைந்த நேரத்திலேயே நமது வேலைகளை செய்து முடிப்பதற்கான ஆற்றலை அளிக்கிறது.நிம்மதியும் மனஅமைதியும் உள்ளவர்கள்தான் ஊட்டச்சத்தான உணவை உண்டு உடல் நலம் பேண முடியும். நிம்மதி இழந்தவர்களின் முகத்தைப்பார்த்தாலே அவர்களது கவலைகள் கண்களில்தெரியும். முக தோற்றம் அவரது வயதை அதிகரித்து காட்டும். உற்சாகத்தை அவரிடம் பார்க்கமுடியாது. எப்பொழுதும் ஏதாவதொரு பயனுள்ள, நன்மை பயக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்க வேண்டும். இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்று சஞ்சலத்துடன் அலைந்து நேரத்தை வீணாக்கக் கூடாது. இத்தகைய பயனற்ற மனப் போராட்டத்தால் நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்களைக் கூட நாம் வீணாக்கி விட்டு கடைசியில் ஒன்றும் செய்யாமல் போய்விடுவோம். எப்பொழுதும் ஏதாவது நல்லதைச் செய்து கொண்டிருந்தால் போதுமானது. நம்முடைய காரியங்களில் இடைவெளி எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கவனக் குறைவான ஒரு சில மணிகள் கூட வாழ்வில் நம்மை கீழே தள்ளிவிடக் கூடும். காலமே வாழ்வு. எனவே, நேரத்தை பொன்போலப் பாதுகாத்து அதனை பயனுள்ள விதத்தில் செலவிடுதல் வேண்டும்

No comments:

Post a Comment