Monday, October 1, 2012

மகாலக்ஷ்மி கடாட்சம் பெற

ஒரு ஊரில் தர்மவாணன் என்றொரு பெரும் செல்வந்தர் இருந்தார். பணத்தை என்னுவதர்க்கே காலம் போதாது என்று கூறும் அளவிற்கு செல்வம் கொட்டியது, பணத்தை மூட்டை மூட்டையாக கட்டிவைத்து எட்டி நின்று பார்த்தார் ஏனென்றால் கிட்டேசென்றால் தன் மூச்சு காற்று பணத்தில் பட்டு பணம் தேய்ந்துவிடும் என்று நினைக்கும் அளவிற்கு மகா கருமி. ஆகமொத்தத்தில் தர்மவாணன் கருமிவாணன்கவே இருந்தான் இவனிடம் இருந்த செல்வம் யாருக்கும் உதவாத வெறும் காகிதமாகவே இருந்தது , ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும அவன் ஒரு பணம் படைத்த பரதேசி. அவனிடமோ பணம் கொட்டோ கொட்டேன்று கொட்டியது , இருப்பினும் எத்தனை காலத்துக்குதான் "மகாலட்சுமி" ஒருவருக்கும் உதவாமல் ஓரிடத்திலேயே முடங்கி கிடப்பாள்! தர்மவாணன் வேண்டுமானால் பணத்தை அனுபவிக்காமல் எட்டிநின்று வேடிக்கை பார்க்கலாம் ஆனால் அவன் மனைவி மக்கள் எத்தனை காலத்துக்குதான் பொறுமையாக வேடிக்கை பார்ப்பார்கள், ஒருநாள் அவனுக்கே தெரியாமல் பணத்தில் பதியை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டார்கள் . அடுத்த ஒருசில மாதங்களிலேயே நாட்டில் பெரும் பஞ்சம் எனவே வியாபாரமும் படுத்துவிட்டது, அரசன் பஞ்சத்தை சமாளிக்க பெரும் செல்வந்தர்களின் வீட்டில் சோதனையிட்டு வரி விதித்து வாரி கொண்டான். மொத்தத்தில் அவன் ஒரு ஏழை ஆனான் ஏழ்மை அவனை வாட்டியது , ஆறுதல் கூறக்கூட ஆளில்லை துடித்தான் பலனில்லை! ஒரு நாள் தர்மவாணன் பசியுடன் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்தான் , அப்போது அவருக்கு எதிரே அவனது இல்லத்து புரோகிதரைக் கண்டான். தலைக்கனம் கர்வம் ஆகியவற்றை இயல்பிலேயே பெற்ற அவன் அன்றுதான் பணிந்தான் வணங்கினான் . ""ஐயா! எனது நிலையைஏன் எனக்கு இந்த நிலை '' என்று புலம்பினான் . அந்த புரோகிதர் தர்மவாணனுக்கு ஆறுதல் சொன்னார். வணிகரே! உங்களுக்கு தெரியாததா? திருமகள் எப்போதுமே ஒரே இடத்தில் நிலையாக தங்குவதில்லை. "இது ஏன்?' என அந்த கண்ணபிரானே லட்சுமியிடம் கேட்டதுண்டு. அதற்கு அவள், "எனக்கு தர்மம் செய்யாத கருமிகள் , மிருகங்களை வதைத்து உண்பவர்கள், சூதாடிகள், பரத்தை வீட்டுக்குப் போகிறவர்கள், குடிகாரர்களை கண்டால் எனக்கு பிடிக்காது . அதிகமாக கோபபடுபவர்கள் , பொய் சொல்பவர்கள், பொறாமைக்காரர்கள் , தற்புகழ்ச்சி செய்து கொள்பவர்கள், தன்னிடம் பணம் உள்ளது என கர்வபடுகிறவர்கள், ஏழைகளை கண்டு இரக்கப்படாதவர்கள் போன்றோருக்கு எனது அருள் கிடைக்காது; கிடைத்திருந்தாலும் அது நிலைக்காது என்றாள். இதை கேட்டு மகிழ்ந்த கண்ணன், "இந்த அவ நடத்தைகள் இல்லாதவர்களின் வீட்டில் மகாலக்ஷ்மி கடாட்சம் எப்போதுமே இருக்கும்' என்பதை உலகுக்கு உணர்த்தினான்'' என்று கூறினார் புரோகிதர். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த தர்மவாணன் மீண்டும் புது பொலிவுடன் தனது தொழிலை மீண்டும் தொடங்கினான் , ஓரளவு வருமானம் கிடைத்தது அதில் குறிப்பிட்ட அளவை ஏழைகளுக்கு ஒதுக்கி அவர்களுக்கு உதவினான் , அவனது சேவை உள்ளமும் , தலை வணங்கும் குணமும் மகாலட்சிமியின் அருளை பெற்று தந்தது. இந்நிலையில் தர்மவாணனின் குணத்தை கேள்விப்பட்டு அவனது மனைவியும், மகனும் அவனிடமே திரும்பிவந்தனர் , நாட்டில் பஞ்சம் ஒளிந்து செல்வம் பெருகியதால் அரசன் தான் பிடுங்கிய பணத்தில் குறிப்பிட்ட அளவை திருப்பி கொடுத்தான் , தர்மவாணன் மீண்டும் பெரும் செல்வந்தர் ஆனான் , பெயருக்கு ஏற்றார் போல் தர்மவாணனாகவே வாழ்ந்தான் . பொதுவாக் துளஸியோ, வில்வமோ எந்த வீட்டில் உண்டோ அங்கே லட்சுமி வாசம் செய்வாள். கோலமிடப்பட்ட, காலை-மாலை வேளைகளில் தீபம் ஏற்றுகிற வழக்கமுடைய வீடுகளும் திருமகளுக்குப் பிடித்த திவ்ய தேசங்கள். பொறாமை, கோபம் இவற்றால் தீண்டப்படாத மனிதர்கள் மேல், திருமகளுக்கு அன்பு அதிகம். தெய்வங்களை தினந்தோறும் வழிபடுபவர்களின் வீட்டை அவள் தேடி வருவது சத்தியம். இவையெல்லாம் அந்த லட்சுமியே கூறியிருப்பவை. ஆன்மீகவாதிகள் இதைத்தான் "லட்சுமி கடாட்சம்' என்று வர்ணிக்கிறார்கள். அந்தத் தாயின் திருவருள், குப்பையிலிருப்பவனை குபேரனாக ஆக்கும்; அவள் அகன்றுவிட்டால் மாளிகைகள் மண் மேடாகிவிடும்

No comments:

Post a Comment