Wednesday, October 3, 2012

** பெண்கள் பூசணிக்காய் வெட்டக்கூடாது என்பது ஏன்?

** பெண்கள் பூசணிக்காய் வெட்டக்கூடாது என்பது ஏன்? சில விஷயங்கள் பெண்கள் செய்யக்கூடாது என்பதற்குக் காரணம் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். தாய்மை எனப்படும் கருணையுள்ளம் பெண்களுக்கே உரித்தானது. பூசணிக்காய், தேங்காய், பரங்கிக்காய் போன்றவை வாஸ்து புருஷன், பைரவர், காளி போன்ற தெய்வங்களுக்கு பலியிடுவதற்கு உபயோகப்படுத்தப் படுகின்றன. உயிர் பலிக்கு ஈடானதாக இவை செய்யப்படுகின்றன. இதுபோன்ற செயல்களை பெண்கள் செய்வதால் மனதில் ஒருவித பயமும், கருச்சிதைவும் ஏற்படும் என்பதால் ஆண்களே செய்யவேண்டும் என ஆன்றோர்கள் வகுத்துள்ளனர் * குளிக்காமல் சமைத்து காகத்திற்குச் சாதம் வைப்பது தவறா? குளிக்காமல் சமைப்பதே தவறு. இதில் காகத்திற்கு வேறா? சமையற்கட்டு அடுப்பு, அரிசி எல்லாமே தெய்வீகமானவை. திருமணத்திற்குப் பிறகு ஒருவர் வாழ்க்கையில் உயர்ந்தால் "பானை பிடித்தவள் பாக்கியசாலி' என்று பெண்ணினத்தைத் தானே பெருமைப்படுத்துகிறார்கள். பானையில் உள்ள அரிசியை எடுத்து நீங்கள் சமைக்க ஆரம்பித்த நாள் முதல், உங்கள் குடும்பம் உயர்ந்த நிலையை அடைவதையே அது குறிக்கிறது. தெய்வீகமான சமையலை குளித்துவிட்டு ஆசாரமாகச் செய்வது நல்லது.

No comments:

Post a Comment