Friday, December 28, 2012

தாமரையின் பெருமை

மகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும். தெய்வ மலர் என்று தாமரை மலருக்கு பெயருண்டு. மகாலட்சுமி மட்டுமின்றி, கலை மகளாம் சரஸ்வதி தேவியும் தாமரை மலரில் தான் வீற்றிருக்கிறாள்.

தாமரை மலருக்கு வேதங்களுக்கு உள்ள பெருமையும் மகிமையும் உண்டு என்ற கருத்தில் கம்பர் தாமரை மலரை `மறை' மலர் என்று குறிப்பிடுகிறார். தாமரை மலர் இறைவனைப் பூசிக்க மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரை என்று சொல்வார்கள்.

No comments:

Post a Comment