Thursday, February 7, 2013

அஷ்டமி, நவமி திதிகளில் மங்கள நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. ஏன்?

அஷ்டமி, நவமி திதிகளில் மங்கள நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. ஏன்? ஓவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. அந்த தேவதைகள் நற்பலன்களை அளிப்பவர்களாக இருந்தால் அந்தத் திதி, மங்கள நிகழ்ச்சிகளுக்கு உகந்ததாகும். உதாரணமாக வார நாட்களில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மங்கள நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. காரணம் இவ்விரு கிரகங்களும் பாப கிரகங்கள். இது போல் பதினைந்து திதிகளில் முதலாவதாகிய பிரதமை எட்டாவது அஷ்டமி, ஒன்பதாவது நவமி, பதினைந்தாவது அமாவாசை இந்த நான்கு திதிகளிலும் தீய பலன்களைக் கொடுக்கும் தேவதைகளின் பலம் அதிகம் என்பதால் இந்த நாட்களில் மங்கள நிகழ்ச்சிகள் செய்வதில்லை. அதனால் தான், இந்த திதிகளில் துர்க்கை, பைரவர் போன்ற தெய்வங்களை வழிபடுகிறோம்

No comments:

Post a Comment