Thursday, February 7, 2013

காஞ்சிப்பெரியவர் சொல்கிறார்

ஆண்கள் நாள் பூராவும் ஆபீஸில் வேலை செய்தே சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விட்டது. மிஞ்சியுள்ள நேரத்தில் அரட்டை, பொழுதுபோக்கு என்றாகி விட்டது. மத சம்பந்தமான நம்முடைய புஸ்தகங்கள், நல்ல இலக்கியங்கள் உள்பட எதையுமே அவர்கள் படிப்பதில்லை. அதனால், பெண்கள் தங்களுக்கு மிஞ்சுகின்ற பொழுதையெல்லாம் நம்முடைய இதிகாசப் புராணங்கள், ஸ்தோத்திரப் புஸ்தகங்கள் ஆகியவற்றை நன்றாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களுடைய பொழுது நல்ல விதமாகக் கழிவதற்கு இது வழி என்பது மாத்திரமில்லை. இப்படி தாங்கள் படித்து அறிந்ததன்
சாராம்சத்தை அவர்களுடைய புருஷர்மார்களுக்கும் சொல்லி அவர்களுக்கும் நம்முடைய சமய கலாசாரத்தில் ஒரு ருசியை ஏற்படுத்தவேண்டும். தானாகப் படித்துத் தெரிந்து கொள்ளப் பிரியம் இல்லாவிட்டாலும், பொண்டாட்டி சொல்கிறாள் என்றால் எவனும் கேட்டுத் தெரிந்து கொள்வான். நம்முடைய புராதனமான, புனிதமான இலக்கியச் செல்வம் நம் காலத்தோடு கொள்ளை போகாமல் இருக்க பெண்கள் பண்டிதைகளானால் தான் முடியும் என்ற நிலை வந்து விட்டதால் இதைச் சொன்னேன்.

No comments:

Post a Comment