Thursday, February 7, 2013

பாரததேசம்

நம் தாய்நாடான இந்தியாவே உலகின் ஆன்மிக தேசமாக விளங்குகிறது. பாரததேசம் என்றும் இதற்குப் பெயருண்டு. இந்தியில் பாரத் என்று தான் குறிப்பிடுவர். வடமொழியில், பா என்பதற்கு ஒளி என்பது பொருள். இருளைக் கிழித்துக் கொண்டு வரும் சூரியனுக்கு ஒளிமிக்கவன் என்னும் பொருளில் பாஸ்கரன் பானு என்ற பெயர்களுண்டு. ரத என்பதற்கு திளைத்திருப்பது அல்லது மூழ்கியிருப்பது என பொருள். நம் நாட்டிலும் பகலும், இரவும் இருக்கத் தானே செய்கிறது என்ற எண்ணம் வரலாம். ஆனால், ஆன்மிக ஞானம் என்னும் ஒளியை இது குறிக்கிறது. உலகெங்கும் அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்திருக்கும் வேளையில் ஞானமாகிய சூரியன் இங்கு தான் உதித்தது. அதை குறிக்கும் விதத்தில் பாரததேசம் என்று முன்னோர்கள் பெயரிட்டனர். ஆனால் சிலர் பரதன் என்னும் மன்னன் ஆண்டதால் பாரதம் என்ற பெயர் வந்ததாகவும் சொல்வதுண்டு.

No comments:

Post a Comment