Tuesday, February 5, 2013

தை பிறந்தால் வழி பிறக்கும் "

முன்னோர் மொழி : “தை பிறந்தால் வழி பிறக்கும் “



தை பிறந்தால் வழி பிறக்கும் "
நடை முறை : " இப்போ ஏன் வீணா முயற்சிப் பண்ணிக்கிட்டு. தை பொறக்கட்டும் அப்புறமா பாக்கலாம்"
"தை பொறந்தா ஏதாவது வழி பொறக்காமலா போயிரும்"
இப்படிச் சொல்லிகொண்டு தான் இன்றைய தலைமுறை செல்வங்கள் இயலாமையால் சோம்பிப் போய் கிடக்கின்றனர். கொடுக்கும் சாமி எப்படியும் கூரையைப் பிய்த்துக்கொண்டுதான் கொடுக்கும், ஏன் அவருக்கு சிரமம், என்று கூரையை பிரித்துவைத்து, வானம் பார்த்து, வாய் பிளந்து காத்திருப்போரும் இருக்கிறார்கள்.முன்னோர் வாக்கை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கை இழந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் : அக்காலத்தில் வயல் வெளியில் தை மாதத்தில் கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி, தலை சாய்த்து, வரப்புகளின் மேல் படர்ந்து, நடந்து செல்ல வழி இல்லாமல், பாதைகளை மறைத்து இருக்கும். தையில் அறுவடை முடிந்த பிறகே மேற்கொண்டு தொடர்ந்து செல்ல வழி பிறக்கும். மேலும் அறுவடை முடிந்த பின்புதான் கடனில் மூழ்கி இருக்கும் விவசாயின் வாழ்க்கையிலும் நல்ல வழி பிறக்கும்
உணர்த்தும் நிலவரம் : இந்த தையில் விழித்து உழைக்க அரம்பித்தால் அடுத்த தையில் பலரது வாழ்க்கையில் வழிபிறக்க காரணமாய் இருக்கலாம்.

No comments:

Post a Comment