Thursday, February 7, 2013

பார்வதிக்கு சிவன் ஞான உபதேசம்

பார்வதிக்கு சிவன் ஞான உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை தேவி கவனமாகக் கேட்கவில்லை. கோபமடைந்த சிவன், பார்வதியை மீன் பிடிக்கும் பரதவர் குலப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார். அப்போது, அங்கு வந்த முருகனும், விநாயகரும் அம்மாவின் பக்கம் சேர்ந்து கொண்டனர். சிவனின் கையில் இருந்த சுவடிகளை(ஞானநூல்கள்) பறித்து வீசியெறிந்தனர். விநாயகரையும், முருகனையும் தங்கள் இருப்பிடத்திற்குள் நுழைய அனுமதித்த நந்திகேஸ்வரரை சுறாமீனாகும்படி சாபமிட்டார். அப்போதும் கோபம் தணியவில்லை. முருகனை வணிகர் குலத்தில் ஊமைப்பிள்ளையாக பிறக்கச் செய்தார். விநாயகரை ஏதும் சொல்லாமல் விட்டுவிட்டார். விநாயகருக்கு சாபம் அளித்தால் மீண்டும் சிவனிடமே வந்து சேரும் என்பதே இதற்குக் காரணம். திருவிளையாடல் புராணத்தில் பரஞ்ஜோதி முனிவர் இதைக் குறிப்பிடுகிறார். இந்நிகழ்ச்சி வலைவீசிய படலத்தில் இடம்பெற்றுள்ளது

No comments:

Post a Comment