Thursday, February 7, 2013

வருண ஜெபம் நடத்துவதன் நோக்கம் என்ன?

 வருண ஜெபம் நடத்துவதன் நோக்கம் என்ன?
வருணனுக்கு ஜலாதிபதி என்ற பெயருண்டு. இவர் மேற்குத் திசைக்கு அதிபதி. "மேற்கில் பெய்தால் கிழக்கில் சுபிட்சம்' என்று சொல்வது இதனால் தான். காவிரி உற்பத்தியாகும் திசை மேற்கு. வருணபகவானுக்குரிய வேதமந்திரம் "வருண சூக்தம்'. இதை வேதியர்கள் ஆறு அல்லது குளங்களில் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு நூறுமுறை பாராயணம் செய்தால் மழை பெய்யும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

விளக்கேற்றி சாமி கும்பிடும்போது மனம் ஒருமுகப்பட என்ன செய்ய வேண்டும்?
கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தும் ஐம்புலன்கள். "புலன்' என்பதற்கு "அறிதல்' என்று பொருள். இந்த புலன்கள், மனதில் பலவித சிந்தனைகளை மாறி மாறி ஏற்படுத்தும்போது மனம் ஒருநிலைப்படுவதில்லை. இதனால், சாமி கும்பிடும்போது மனம் அலைபாய்கிறது. வாயால் அவன் திருநாமத்தை உச்சரித்து, அதையே காதுகள் கேட்க வேண்டும். பூஜைக்குப் பயன்படும் நறுமணப் பொருட்களையே மூக்கு நுகர வேண்டும். விபூதி, திருமண் தரித்து பாரம்பரிய உடைகளை அணிந்து இறைவனை வணங்கும் செயலில் உடல் ஈடுபட வேண்டும். இப்படி புலன்களை இறைசிந்தனையில் ஈடுபடுத்தி விட்டால் மனமும் ஒருமுகப்பட்டு விடும்.

*

No comments:

Post a Comment