Thursday, February 7, 2013

தாரக மந்திரம்' என்றால் என்ன?

 "தாரக மந்திரம்' என்றால் என்ன?
"தாரக' என்ற சொல்லுக்கு நுண்ணிய, நுட்பமான, உயர்ந்த என்று பொருளுண்டு. இறைவனுடைய திருநாமத்தை அதற்குரிய பீஜாட்சர மந்திரத்துடன் சேர்த்து உச்சரித்தால் சக்தி அதிகம். உடனடியாக பலன் கிடைக்கும். இத்தகைய உயர்ந்த மந்திரத்தையே "தாரகமந்திரம்' என்பர். இவற்றைப் புத்தகத்தைப் பார்த்துப் படித்து ஜெபிக்கக் கூடாது. உச்சரிப்பு பிழை ஏற்பட்டால் எதிர்மறை பலன்கள் ஏற்படும். தெரிந்தவர்களிடம் முறையாக கற்று உச்சரிப்பது நல்லது. ராமநாமத்திற்கு தாரகமந்திரம் என்றொரு பெயர் உண்டு.

அவசர காலத்திற்கேற்ப அதிகபலன் தரக்கூடிய மந்திரம் இருந்தால் சொல்லுங்கள்.
.

மந்திரங்கள் மட்டும் தான் இன்னும் மாற்றப்பட வில்லை. அதையும் கெடுத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே! நோய் குணமாக மருத்துவர் ஆலோ சனையைப் பின்பற்றுவது அவசியம். இல்லாவிட்டால் பூரண குணம் உண்டாகாது. அதுபோலவே தான் மந்திரமும். பொறுமையுடன் ஜெபித்து வரவேண்டியது அவசியம். உடனடி பலன் தேடும் உங்களைப் போன்றவர்களால் தான், ஆன்மிகத்திலும் ஏமாற்றுக்காரர்கள் உண்டாகி விடுகிறார்கள்.

இரவுநேரத்தில் நட்சத்திரம் எரிந்து விழுவதைப் பார்ப்பது கூடாது என்கிறார்களே. ஏன்?
இதைப் பார்த்தால், ஞாபகமறதி உண்டாகும். ஆனால், இயற்கையாக நிகழ்வதை யதார்த்தமாகப் பார்த்துவிடுகிறோம்! அதற்காக என்ன செய்ய முடியும்?

No comments:

Post a Comment