Thursday, March 14, 2013

முக்திக்கு வழி


முக்திக்கு வழி

·        
மகாபாரதப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். ஒரு நாள் தர்மபுத்திரரும், பீமனும் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது தர்மபுத்திரா¢டம் அந்தணர் ஒருவர் வந்து தானம் கேட்டார். "உடல் களைத்துப் போய் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது வந்து தானம் கேட்கின்றாயே, நாளை வா!" எனக் கூறினார் தருமர். இதைக் கேட்டதும் பீமன் சி¡¢த்தான். அப்படிச் சி¡¢த்ததற்கு என்ன காரணம் என பீமனிடம் கேட்டார் தர்மபுத்திரர். "நீங்கள் எமனை வென்றுவிட்டீர்கள். வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. அதிலும் நாம் யுத்தகளத்தில் இருக்கிறோம். இந்த நிலையில் நாளைவரை காத்திருப்போம் என நினைக்கிறீர்களே, அதைக் கேட்டுத்தான் எனக்கு சி¡¢ப்பு வந்தது" எனக்கூறினான் பீமன்.

நேற்று இருந்தவர் இன்று இல்லை. சற்று நேரத்திற்கு முன் இருந்தவர் இப்போது இல்லை என்பது தான் வாழ்க்கை. ஜீவாத்மாக்களுக்கு பிறப்பும், இறப்பும் மாறிமாறி வருகின்றன. பிறவி என்பது பெருங்கடல். அந்தக் கடலை நீந்திக் கரை சேர்ந்தால் தான் முக்தி கிடைக்கும்.

ஜீவாத்மாக்களுக்கு எளிதில் முக்தியடைய சாஸ்திரங்கள் சரணாகதி மார்க்கத்தை மேற்கொள்ளும்படி கூறுகின்றன. "ஜீவாத்மா பாவச்சுமையை அகற்றுவதற்கு இறைவனிடம் சரணாகதி அடைய வேண்டும்" என பகவத்கீதை கூறுகிறது.

நம்மாழ்வார் போன்ற அடியார்கள் சரணாகதி மார்க்கத்தைக் கடைபிடித்து முக்தியடைந்தார்கள். சரணாகதி தத்துவத்தின்படி எல்லோரும் ஒரு நாள் மன்னிக்கப்படுவார்கள்...
ஜீவாத்மாக்களுக்கு எளிதில் முக்தியடைய சாஸ்திரங்கள் சரணாகதி மார்க்கத்தை மேற்கொள்ளும்படி கூறுகின்றன. "ஜீவாத்மா பாவச்சுமையை அகற்றுவதற்கு இறைவனிடம் சரணாகதி அடைய வேண்டும்" என பகவத்கீதை கூறுகிறது.

நம்மாழ்வார் போன்ற அடியார்கள் சரணாகதி மார்க்கத்தைக் கடைபிடித்து முக்தியடைந்தார்கள். சரணாகதி தத்துவத்தின்படி எல்லோரும் ஒரு நாள் மன்னிக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment