Thursday, April 4, 2013

நவராத்திரி விழா

நவராத்திரி விழா நவராத்திரி விழாவை அலங்கரிக்கும் கொலு, 9 படிகளைக் கொண்டதாக இருக்கும். கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை தாமச குணத்தைக் குறிக்கும்; அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், அரசி, மந்திரி, வேலையாட்கள் போன்ற உருவங்கள் ரஜோ குணத்தைக் குறிக்கும்; மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்வ குணத்தை அடையும் வழியை நமக்கு உணர்த்துகின்றன.துர்கை என்றால் 'அகழி’ என்றும் பொருள். அதாவது, அடியார்களுக்கு அகழி போல் அரணாக இருந்து அவர்களைப் பாதுகாப்பவள். துர்க்கமன் என்ற அரக்கனைக் கொன்று அடியார்களைக் காத்ததால், நாம் அவளை துர்கை என்று அழைக்கிறோம். மூன்று சக்திகளின் ஒன்றிய வடிவமாகத் தோன்றியவள் துர்கை. துர்கையைத் தமிழில் 'கொற்றவை’ என்பர். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கு உரியதாகும். கல்விக்கு அதிபதி சரஸ்வதி. சரஸ் என்றால் 'பொய்கை’ என்றும், வதி என்றால் 'வாழ்பவள்’ என்றும் பொருள். சரஸ்வதி என்றால் 'மனம் எனும் பொய்கையில் வாழ்பவள்’ என்று பொருள். நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள் (நவராத்ர வ்ரதஸ் அஸ்ய நைவ துல்யானி பூதலே). தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக் கூடிய விரதம் நவராத்திரி விரதம். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும். படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.

No comments:

Post a Comment