Wednesday, April 3, 2013

மருத்து நீர் என்றால் என்ன?

மருத்து நீர் தமிழ் வருடப் பிறப்பன்றைய ஸ்நானத்தில் முக்கிய இடம்பெறும் மருத்து நீர் பற்றி நோக்குவோம். சகல தோஷங்களையும் நீக்கவல்ல மருத்து நீரை, சுத்தமான நீரில், தாழம்பூ தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை இட்டு நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லத்திலே இதனைக் காய்ச்சிக் கொள்ள இயலாதவர்கள் இப்புனித மருத்து நீரை, ஆலயங்களிலே அந்தணப் பெரியோர் மூலம் பெற்று ஸ்நானம் செய்தாக வேண்டும். இவ்வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் ஸ்நானம் செய்தாக வேண்டும்

No comments:

Post a Comment