Sunday, May 26, 2013

சந்நியாசம் பெற்றவர்கள் பூணூல் அணிவதில்லையே ஏன்?

சந்நியாசம் பெற்றவர்கள் பூணூல் அணிவதில்லையே ஏன்?

உலகியல் வாழ்விலிருந்து விடுபடுபவர்களே சந்நியாசிகள். ஜாதி, மதம், உறவு, பந்தபாசம் எல்லாவற்றையும் துறந்தவர்களே துறவிகள். துறவுநிலை மேற்கொள்ள மற்றொரு துறவி தீட்சை கொடுக்க வேண்டும். அன்றைய தினம் தலை முழுகும்போது மண்,பெண், பொன் ஆகிய மூவாசைகளையும் துறந்து விட்டேன் என்று சொல்லி மூழ்கி எழும்போது பூணூல் அணியும் வழக்கில் உள்ளவர்களாக இருந்தால் அதையும் கழற்றி விட வேண்டும். அனுஷ்டானத்திற்கு ஒரு சாதனம் தான் பூணூல். சந்நியாச நிலைக்கு உயர்ந்து விட்டால் அது தேவையில்லை

No comments:

Post a Comment