Thursday, July 4, 2013

எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் அறிவோமா

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கிணங்க வரம் தரும் மரங்களை புது வீடு குடிபுகுந்த உடனே வைத்து விடலாம். அரச மரத்தையும் நாகலிங்க மரம், ஆல மரத்தையும் வீட்டில் வைக்க வேண்டாம். பூமியில் வேர்ப்பரவலால் வெடிப்பு உண்டாகிவிடும். அரசு வேம்பு சேர்த்து வைக்கலாம். எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் அறிவோமா!

அகண்ட வில்வ மரம்-    செல்வத்தைக் கொடுக்கும். (அதிஷ்ட மரம்) கருநெல்லி மரம்-    மகாலட்சுமி அருளைக் கூட்டும்.
வேப்ப மரம்-    துர்தேவதைகளை விரட்டும்.
பும்சிக மரம்-    மலடியும் குழந்தை பாக்யம் பெறுவாள்.
சிரஞ்சீவி மரம்-    ஆயுள் விருத்தியைத் தரும்.
சந்தானக மரம்-    நல்ல பாரம்பரியத்தை உருவாக்கும்.
குறுந்த மரம்-    வீட்டின் வாஸ்து தோஷங்களைப் போக்கும்.
பின்னை மரம்-    கிருஷ்ணர் அருள் கூட்டும். திருமணப் பேறு கிட்டும். சண்பக மரம்-    ஆயுட்காலத்தில் சௌபாக்யங்களைத் தரும்.
கல்லால மரம்-    குரு அருள் தரும். பொருள் பணம் காசு குவியச் செய்யும்.
பிராய் மரம்-    மின்னலைத் தடுத்து வீட்டைக் காத்து வரும்.
மகிழ மரம்-    பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்.
பன்னீர் பூ மரம்-    விபத்துகள் வராமல் தடுக்கும்.
கொன்றை மரம்-    துஷ்ட சக்திகளை விரட்டும்.
மாமரம்-    லட்சுமி சரஸ்வதி அருள் தரும்.
பலா மரம்-    பால் பாக்யம் கிட்டும். பொன் சேர்க்கும் பேறு கிட்டும்

No comments:

Post a Comment