Thursday, August 22, 2013

நீதிபதி முன் தராசு இருப்பது ஏன்?

நியாயத்தின் சின்னம் தராசு. துலாக்கோல் என்று இதனைக் குறிப்பிடுவர். நீதிபதியின் முன் சத்தியத்தின் அடையாளமாக உள்ள நீதிதேவதையின் கையில் தராசு இடம் பெற்றிருக்கும். அந்தக் காலத்தில் நியாயசபையில் வாதி, பிரதிவாதிகளை தராசின் முன் சத்தியபிரமாணம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. ஒரு பெரிய தராசில் ஒரு தட்டு நிறைய பொன்,பொருளை நிரப்புவர். மற்றொரு தட்டில் வழக்கிற்கு உரியவரை ஏறி நிற்கச் சொல்வர். அவர் தராசை நோக்கி, சத்தியத்தின் இருப்பிடமே! நீ உண்மையை சொல்வாயாக! என்னை நீயே காத்தருளவேண்டும்! என் பக்கம் நியாயம் என்றால் மேலே கொண்டு செல்! நான் பாவி என்றால் கீழே கொண்டு போ! என்று பிரார்த்திப்பார். இதற்கு துலாப்பிரமாணம் என்று பெயர்

No comments:

Post a Comment