Saturday, September 21, 2013

தசாவதாரங்களில் சிறந்தது எது?


தசாவதாரங்களில் சிறந்தது எது?

ஒரு சமயம் விஷ்ணுவை வழிபடுகிறவர்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் வணங்கத்தக்கவை எவை என்று எழவே இடைக்காட்டுச் சித்தரிடம் கேட்டனர்.

இடைக்காடரோ ‘ஏழை இடையன் இளிச்சவாயன்’ என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். தங்களுக்குப் பதில் சொல்லச் சங்கடப்பட்டு தன்னைத் தாழ்த்திக் கொண்டு சென்றுவிட்டாரோ, என்று அவரது தன்னடகத்தை எண்ணிய அவர்கள் பின்னர் அவர் கூறியதை மறுபடியும் எண்ணிய போது அவர்கள் கேட்ட கேள்விக்கான விடையும் புலப்பட்டது....

# ஏழை - சக்கரவர்த்தித் திருமகனாகப் பிறந்தும் ஏழையாகவே வாழ்ந்த இராமன் அவதாரம்.

# இடையன் - கிருஷ்ணாவதாரம்

# இளிச்சவாயன் - நரசிம்மர்

இதனால் தெளிவு பெற்றவர்கள் இடைக்காடரின் தன்னடக்கத்தையும் நுண்ணறிவையும் புகழ்ந்தனர்

No comments:

Post a Comment