Monday, September 23, 2013

வீட்டில் படையல் வழிபாடு செய்வது எப்படி?



வீட்டில் படையல் வழிபாடு செய்வது எப்படி?
குளத்தில் தர்பணம் முடித்தவுடன் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு)

* மறைந்தவர் படத்தை சுத்தம் செய்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து சந்தனம், குங்குமம் இடவும், படத்திற்கு துளசி மாலை, வில்வ மாலை சாற்றுவது நல்லது.

* மரமணை வைத்து அதில் அவர் பயன்படுத்திய துணி, நகை, கண்ணாடி வைக்கவும்.

* 2 குத்து விளக்கு (ஒரு முகம் ஏற்றவும்), மறைந்தவருக்கு பிடித்த இனிப்பு, காரம், பழங்கள்.

* தங்கள் குல வழக்கப்படி முழு தலைவாழையிலை படையல் போடவும்.

* ஓட்டலில் உணவு ஏற்பாடு செய்திருந்தாலும் படையலுக்காக வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்யவும்.

* கோதுமை தவிடு 2 கிலோ, அகத்திகீரை, வெல்லம் கிலோ, வாழைப்பழம் 3 ஆகியவற்றை கலந்து முந்திய நாளே ஊறவைத்து தெவசம் அன்று காலையில் பசுவிற்கு தானம் செய்யவும்.

No comments:

Post a Comment