Thursday, November 28, 2013

இது கடவுளுக்கு பிடித்த உணவு

இது கடவுளுக்கு பிடித்த உணவு

* உயர்ந்த வழிபாட்டை "சமாராதனை' என்று குறிப்பிடுவர். "சம்' என்றால் "நல்ல', "ஆராதனை' என்றால் "வழிபாடு' என்பது பொருள். ஏழைக்குச் சேவை செய்வது சமாராதனை எனப்படும்.

* கோயிலில் ஆடம்பரத்துடன் படைக்கும் பொங்கலை இறைவன் ஏற்கிறானா என்பது சந்தேகமே. ஆனால், ஏழைகளுக்காக தானம் செய்வதற்காக தயாரிக்கப்படும் பொங்கலை, இறைவன் மிக விருப்பத்தோடு உகந்து ஏற்பான்....

* நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் என்னும் சித்தர், கோயிலில் இருக்கும் இறைவனை "படமாடும் கோயில்' (சிற்பம்) என்றும், ஏழை எளியவர்களை "நடமாடும் கோயில்' என்றும் குறிப்பிடுகிறார்.

* தபால்களை நேரே தபால் நிலையத்தில் சேர்த்தால், வீதிகளில் இருக்கும் தபால் பெட்டிகளுக்கு அவை வரத் தேவையில்லை. ஆனால், வீதிகளில் உள்ள தபால் பெட்டிகளில் இட்ட தபால் தலைமை தபால் அலுவலக்ததிற்கு வர வேண்டியது அவசியம். தபால் பெட்டி ஏழை எளியவர்களைப் போன்றது. அஞ்சல் நிலையம் ஆண்டவன் வாழும் கோயில்.

* ஆலயங்களில் செய்யப்படும் வழிபாட்டைக் காட்டிலும் ஏழைகளுக்குச் செய்யும் தொண்டுகள் மூலம் இறைவனை அடைவது சிறந்தது. அதனால் தான் இறைவழிபாட்டை "ஆராதனை' என்றும், ஏழைகளுக்குத் தானம் செய்வதை "சமாராதனை' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

- வாரியார்.

No comments:

Post a Comment