Wednesday, December 18, 2013

நடராஜருக்கு களி படைப்பது ஏன்?

நடராஜருக்கு களி படைப்பது ஏன்?

சிதம்பரத்தில் வாழ்ந்த சேந்தனார் என்னும் அடியவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவிடுவது வழக்கம். ஒருநாள் மழை பெய்த சமயத்தில், அடியவர் ஒருவர் உணவுக்காக வந்தார். சேந்தனாரின் மனைவி களி தயாரிக்க அரிசி, உளுந்துமாவு எடுத்தார். அடுப்பு பற்ற வைக்க முடியாமல், விறகெல்லாம் மழையில் நனைந்திருந்தது. இருந்தாலும், ஈரவிறகை வைத்தே ஒருவழியாக சமைத்து அடியவருக்கு களி படைத்தார். அவரும் அதை சாப்பிட்டு மகிழ்ந்தார். அன்றைய நாள் திருவாதிரை நாளாக இருந்தது. மறுநாள் சேந்தனார் சிதம்பரம் நடராஜரை தரிசிக்கச் சென்றார். அங்கு கோயிலில் சுவாமியின் வாயில் களி ஒட்டியிருந்ததைக் கண்டார். மெய் சிலிர்த்துப் போனார். அடியவராக வந்து தங்களை ஆட்கொண்டவர் நடராஜரே என்பதை உணர்ந்தார். அன்று முதல் திருவாதிரைஅன்று களி படைக்கும் வழக்கம் வந்தது.

No comments:

Post a Comment