Friday, February 28, 2014

வேதத்தை படித்து அதன் நுண் பொருளை உணர்ந்து தவம செய்பவரே "அந்தணர்" ஆவார்!

"நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலோன்றும் அந்தணர் பார்ப்பர் பரமுயிர்
ஒரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே" - பாடல் - 1665

நூலும் சிகையும் உணராதவர்கள் மூடர்கள் என திருமூலர் தெளிவாக கூறுவதை பாருங்கள்! நூல் - பருத்தி - பஞ்சு நூலல்ல! ஞான நூல்! வேத புராண புனித நூற்கள்! அவற்றின் முடிந்த முடிபான ஞான விளக்கங்கள்! நூலை படிப்பது நுண்ணறிவு துலங்குவதற்கே! சிகை - குடுமி! தேங்காய் குடுமி போல தலைமுடியை வைப்பதல்ல! தோளிலே மூன்று நூல்களை இணைத்து பூணுல் போடுவதல்ல! நூல் என்றால் வேதாந்தம் சிகை என்றால் வேதத்தின் பொருளை கற்று தெளிந்த நுண் அறிவை குறிப்பதை! பரிபூரண அறிவே ஞானமாம்! "பாரப்பா பலவேத நூலும் பாரு" என அகத்தியரும் கூறுகிறார். இங்ஙனம் வேதத்தை படித்து அதன் நுண் பொருளை உணர்ந்து தவம செய்பவரே "அந்தணர்" ஆவார்!

No comments:

Post a Comment