Monday, February 24, 2014

மந்திரங்கள்


மந்திரங்கள்

சந்தையிலிருந்து கன்றுக்குட்டி ஒன்றை வாங்கி வந்தான் விவசாயி, அதன் கழுத்துப் பட்டையில் மணிகளிடையே உயர்ந்த ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அதை சாதாரணக் கற்கள் என விவசாயி நினைத்தான். இதைக் கவனித்த ஒரு ரத்தின வியாபாரி கன்றுக்குட்டியை அதிக விலைக்குக் கேட்டான். விவசாயியும் விற்றுவிட்டான். ரத்தின வியாபாரி ரத்தினங்களை எடுத்து விற்று அதிக லாபம் பார்த்தான். கன்றுக்குட்டியை திரும்ப விவசாயிடமே இனாமாகக் கொடுத்தான். விவசாயிக்கும் ரொம்ப சந்தோஷம்! கன்றுக்குட்டியை வாங்கி விற்றதில் லாபம் கிடைத்தது. கூடவே, கன்றுக் குட்டியும் கிடைத்துவிட்டது. ரத்தின வியாபாரிக்கும் அதிர்ஷ்டம் போல ரத்தினம் கிடைத்தது.

விவசாயி அடைந்த லாபம்-மந்திரங்களை பொருள் புரியாமலே சொல்வது போன்றதாகும். ரத்தின வியாபாரி பெற்ற அதிர்ஷ்டம், மந்திரத்தைப் பொருள் அறிந்து சொல்வது போன்றதாகும். ஆக, பொருள் புரியாமல் மந்திரங்கள் சொன்னாலும் லாபம் உண்டு.

No comments:

Post a Comment