Wednesday, February 19, 2014

நாத்தீகனுக்கு சமர்ப்பணம் !

நாத்தீகனுக்கு சமர்ப்பணம் !

காற்று உட்பட, கண்ணிற்குத் தெரியாதது எதையும் நம்ப மறுத்தான் ஒரு சிறுவன். அவனது தந்தை, காற்றில் அசையும் மரத்தின் இலைகளை அவனுக்குக் காண்பித்து, “நீ நம்ப மறுக்கும் காற்றின் செய்கையைப் பார்” என்று கூறினார். “நீங்கள் எனக்கு இலைகளைத்தான் காட்டுகிறீர்கள். காற்றையல்ல. காற்று எங்கிருக்கிறது?” என்று வாதாடினான் அவன். உடனே அத்தந்தை, அவனது மூக்கின் இரு துவாரங்களையும் வாயையும் தமது கையால் நன்கு அழுத்தி மூடிவிட்டார். மூச்சுத் திணறிய அவன், தன்னை விடுவிக்குமாறு துடி...த்தான். சில வினாடிகள் கழித்துத் தந்தை அவனை விடுவித்தார். “நீங்கள் என் மூச்சை தடுத்துவிட்டீர்கள், அது என்னை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டது” என்று தந்தையிடம் கோபித்துக் கொண்டான் அச்சிறுவன். அதற்கு அவர், “நீ மூச்சாக உள் வாங்கிக் கொள்ள நினைத்தாயே, அது என்ன?” என்று கேட்டார். “காற்று” என்று கூறி அதன் இருப்பை அவன் கடைசியில் ஒப்புக் கொண்டான்.

ஒரு பொருள் கண்ணிற்குப் புலப்படாததால், அது இல்லை என்று எல்லா சமயத்திலும் கூறிவிட முடியாது. காற்றைப் போலவே இறைவனும் கண்ணிற்குப் புலப்படாவிடினும், நிச்சயம் அவர் இருக்கிறார். அண்ட சராசரங்களைப் படைத்து, காத்து மற்றும் அழிப்பது இறைவன் தான்.

நன்றி: அறிவூட்டும் சிறுகதைகள்
Mehr anzeigen

No comments:

Post a Comment