Sunday, February 23, 2014

துன்பம் தரும் அனுபவங்கள் அனைத்தையும் நம்மைச் செம்மைப்படுத்துவதற்காகவே



''தங்கத்தை செய்யும் பொற்கொல்லரிடம், ""நான் கொடுக்கும் தங்கத்தை நெருப்பில் போடாதீர்கள். அடித்து துன்புறுத்தாதீர்கள். அதை தட்டி நீட்டவும் வேண்டாம...். ஆனால், அழகான தங்கச்சங்கிலியாக மட்டும் மாற் றுங்கள்,'' என்று சொன்னால் என்ன செய்யமுடியும். தங்கத்தை ஜொலிக்கச் செய்ய வேண்டும் என்றால் நெருப்பில் இட்டு புடம் போட்டால் தான் முடியும்.அதை தட்டி, உருக்கி செய்வதெல்லாம் அது அழகிய அணிகலனாக மாறச் செய்வதற்காகவே. இதுபோல, ஆன்மிகவாழ்வில் ஈடுபடும் சாதகர்கள், ""இறைவா! எனக்குத் துன்பத்தைக் கொடுக்காதே. என்னை வருத்தாதே. ஆனால், ஆனந்தம் மிகுந்த ஆத்மஅனுபவத்தை மட்டும் கொடு,'' என்று கேட்கிறார்கள். வாழ்வில் துன்பம் நேர்ந்தாலும் தெய்வத்தின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இன்பதுன்பங்கள் எதுவானாலும், அது அவன் காட்டிய வழி என்று பூரணமாக முழுமனதுடன் ஏற்று, அவரது திருவடிகளைச் சரணடைய வேண்டும். நம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டால் அதன்பின்னர் புறநிகழ்ச்சிகளும் நம்மைப் பாதிப்பதில்லை. புடமிட்ட தங்கம் இறுதியில் நல்ல மதிப்புடைய அணிகலனாக மாறுவதுபோல துன்பம் தரும் அனுபவங்கள் அனைத்தையும் நம்மைச் செம்மைப்படுத்துவதற்காகவே இறைவன் தருகிறான்





No comments:

Post a Comment