Tuesday, February 18, 2014

கீதோபதேசம் ---எந்த உயிரையும் வெறுக்காதே





கீதோபதேசம்
- எந்த உயிரையும் வெறுக்காதே!
__________________________________

அர்ஜுனன் கேட்டது!...
எப்பொழுதும் இடைவிடாது யோகத்தில் உறுதியுடனிருந்து உன்னைத் தியானிக்கும் பக்தர்கள்,அழிவற்றப் பரம்பொருளை வழிபடுவோர்இவர்களுள் யார் சிறந்த யோகிகள் ஆவார்?

ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்..

என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி, எப்பொழுதும் பக்தியுடனும் மாறாத உறுதியுடனும், மிகவும் மேலான நம்பிக்கையுடனும் என்னை யார்வழிபடுகிறார்களோ, அவர்களை நான் யோகத்தில் மேம்பட்டவர்கள் என்று கருதுகிறேன்.

எவன் ஒருவன் எந்த உயிரையும் வெறுக்காமல் இருக்கிறானோ, எல்லோரிடமும் நட்பு கொண்டவனாக, கருனை உள்ளவனாக இருக்கிறானோ,பற்றற்றும், நான், எனது என்ற எண்ணத்தை எல்லாம் அறவே கைவிட்டவனாக இருக்கின்றானோ, இன்பத்திலும், துன்பத்திலும் சமநிலையில்இருக்கிறானோ, மன்னிக்கும் பாங்கும், பொறுமை உடையவனாகவு இருக்கிறானோ அவனே எனக்குப் பிரியமானவன்.

எப்போதும் போதும் என்ற மனத்திருப்தி உடையவனாகவும், தியானத்தில் உறுதியாகவும், திடசித்தம் உடையவனாகவு, யோகப் பயிற்சியில்அனுபவம் பெற்றவனாகவும் இருக்கிறானோ அவனே எனக்குப் பிரியமானவன்.

எவனொருவன் தன்னடக்கம் உள்ளவனாகவும் உறுதியான கொள்கை உடையவனாகவும், தனது மனத்தையும், அறிவையும் என்னிடம் அர்ப்பணம்செய்தவனாகவும் யார் இருக்கிறானோ அத்தகைய பக்தனே எனக்குப் பிரியமானவன்.

தனஞ்செயா! எவன் உலகுக்கு யாதொரு துன்பமும் இழைப்பதில்லையோ, உலகால் துன்பமடையாமலும் இருக்கிறானோ, எவன் மகிழ்ச்சி,கோபம், அச்சம், கவலை ஆகியவை நீங்கியவனாக இருக்கிறானோ, அவனே எனக்கு விருப்பமானவன்.

எதையும் விரும்பாதவனாய், தூயவனாய், திறமைசாலியாய், பற்றின்றி எல்லாவற்றையும் சமமாக கருதுபவனாய், கவலையற்றவனாய்,எல்லா ஆடம்பரங்களையும், செயல்களையும் துறந்தவனாய் என்னிடம் பக்தியோடு இருப்பவன் எவனோ அவனே எனக்குப் பிரியமானவன்.

மகிழ்ச்சியடைதலும், வெறுத்தலும், துயரமடைதலும், விரும்புதலும் இன்றி, நல்லது, கெட்டது எல்லாவற்றையும் எவன் துறந்து விடுகின்றானோ,அந்தப் பக்தனே எனக்குப் பிரியமானவன்.

அர்ஜுனா! விரோதியையும், நண்பனையும் ஒரே விதமாகக் கருதுபவனும், மானம் அவமானம், குளிர்-உஷ்ணம், இன்பம்-துன்பம் ஆகியவற்றைசமமாகக் கருதுபவனும், பற்றுதலில் இருந்து விடுதலை பெற்றவனும் எனக்குப் பிரியமானவன்.'

புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதுபவனும், மௌனமாக இருப்பவனும், தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைபவனும்உறுதியான உள்ளம் படைத்தவனும், பக்திமானாகிய அவனே எனக்கு பிரியமானவன்.

அர்ஜுனா! நான் கூறியுள்ளபடி தர்மத்தின் சாரமான இதை யார் நம்பிக்கையுடனும், என்னைலட்சியமாகக் கொண்டு என்னை யார்பின்பற்றுகிறார்களோ, அத்தகைய பக்தர்களையே நான் மிகவும் விரும்புகிறேன்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.

No comments:

Post a Comment