Wednesday, April 16, 2014

ஆலயத்துள் நுழையும் போது கோபுரப் படிகளை தொட்டு வணங்குவது ஏன்?

ஆலயத்துள் நுழையும் போது கோபுரப் படிகளை தொட்டு வணங்குவது ஏன்?
ஆலயம் என்பது நாமறியாமலே பல ஞானிகளும் பெரியவர்களும் கூடும் இடம்...
ஆலயத்துள் ஆண்டவன் ஒருவனே பெரியவன...், அங்கே வேறெவரையும் வணங்கக் கூடாது என்பதற்காக, இறைதரிசனத்துக்கு முன்பே, அங்கு காலடி பதித்த அத்தகைய பெரியவர்களின் திருப்பாதங்களுக்கு நம் வணக்கத்தைச் செலுத்துமுகமாக ஆலயப்படியை தொட்டு வணங்குகிறோம்.
ஆலயங்களுக்கு ஏழை, எளியவரும் வருவதுண்டு. நம் ஆணவத்தையும் பகட்டையும், வீண்பெருமையையும் அங்கேயே விட்டுவிட்டு, இறையடியார்களான அவர்களுக்கும் வணக்கம் தெரிவித்துவிடுவதாகவும் ஆகிறது.

No comments:

Post a Comment