Thursday, May 29, 2014

நமச்சிவாய" -

ஓம்" - திருமுறைகளில் இல்லாத ஒன்று
பன்னிரு திருமுறைகளில் எங்குமே ஒலிக்கப்படாத ஒலி
...
"நமச்சிவாய" - நமக்கு துணையாகும் ஒரே நாமம்
நற்றுணையாவது நமச்சிவாயவே - அப்பர் வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர் நமச்சிவாய வாழ்க - மாணிக்கவாசகர் நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே - சுந்தரர்
"ச்" இல்லாத நமசிவாய - இகவாழ்வில் சுகம் தராது
உச்சரிக்கும் போது "ச்" தவறாமல் சேர்த்து உச்சரிக்க வேண்டும். "ச்" இல்லாத "நமசிவாய" இக வாழ்வில் சுகம் தராது
"ஓம் நமசிவாய" - வினையைப் பெருக்கும்
"ஓம்" உடன் சேர்த்து நமச்சிவாய சொல்லக்கூடாது. சொன்னால் அது உயிருடன் வினையை சேர்த்துக் கட்டும்; விடுவிக்காது.
"நமச்சிவாய" - வினைகளை விலக்கும்
நமச்சிவாய என்பது நாதன் நாமம் அதாவது எம்பெருமானின் திருநாமம். இது மந்திரமல்ல , மெய்ப்பொருள், மெய், சிவம்
தவறாமல் சொல்வோம்
நாளும் இரவும் நாங்கள் சொல்வோம் நமச்சிவாய நமச்சிவாய நம்மைக் காக்கும் இறைவன் நாமம் நமச்சிவாய நமச்சிவாய

No comments:

Post a Comment