Thursday, May 29, 2014

சித்ரா பவுர்ணமி அன்று எண்ணெய் தேய்த்து குளியுங்கள்

தீபாவளியைப் போல, எண்ணெய்க்குளியலுக்கு முக்கியமான மற்றொரு நாள் சித்ரா பவுர்ணமி. சித்ரா பவுர்ணமிக்குரிய தெய்வம் சித்ரகுப்தர். எமனின் கணக்குப்பிள்ளை இவர். எமனுக்கு உதவி செய்ய அவு தும்பரன், சண்டா மிருகன், சம்பரன், சார்த்தூலன் என்ற நான்கு தூதர்கள் உள்ளனர்.

திசைக்கு ஒருவராகச் சென்று குறித்த நேரத்திற்குள் உயிரைப் பறிப்பது இவர்களின் பணி. சித்ரகுப்தர் உயிர்கள் செய்த பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மராஜாவுக்கு அறிக்கை அளிப்பார். அதன் அடிப்படையில் எமன் அவர்களுக்கு தண்டனை கொடுப்பார்.

சித்ராபவுர்ணமி அன்றுதான் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுமாம். எனவே அன்று சித்ரகுப்தரை மனதார நினைத்து, "சித்ர குப்தரே என்பாவ, புண்ணிய கணக்கை எழுதும் போது, பாவங்களைக் குறைத்து புண்ணியத்தை கூட்டி எழுதுவீர்! இனி, நான் எத்தகைய பாவத்தையும் செய்யமாட்டேன்.

`இதுவரை செய்த பாவங்களுக்கு, இந்த எண்ணை குளியலுடன் முழுக்கு போட்டு விடுகிறேன்' எனச் சொல்லி, நல்லெண்ணையை தேய்த்து குளித்துபிவிட வேண்டும். இதற்கு கைமேல் பலன் உண்டு.

No comments:

Post a Comment