Friday, June 20, 2014

பொது இடத்தில் காட்டிய கண்டிப் ----- விவேகானந்தர்.


ஒருமுறை, ராமகிருஷ்ண மடத்திற்கு தன் அன்னையை அழைத்து வந்தார் விவேகானந்தர். மகன் கட்டிய மடம் என்பதால் அதிக உரிமை எடுத்துக் கொண்டார் அந்தத்தாய். பூக்களைப் பறிப்பது, காய்கறிகளைப் பறிப்பது என யாரையும் கேளாமல் ஒவ்வொன்றாகச் செய்தார்.
* அந்தத்தாயை யாராலும் எதுவும் சொல்லவும் முடியவில்லை. விவேகானந்தர் இதைக் கவனித்துக் கொண்டே இருந்தார்.
""அம்மா! நீங்கள் செய்வது முறையல்ல. இந்த மடத்தை நான் கட்டியிருக்கிறேன் என்பதற்காக நீங்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்ளக்கூடாது. இதை என் குருதேவருக்காக கட்டியுள்ளேன். இங்குள்ள ஒவ்வொரு பொருளும் அவருக்கும், அவரைச் சார்ந்த தொண்டர்களுக்குமே சொந்தம். அவர்கள் தேவையான சமயத்தில் இவற்றைப் பறித்துக் கொள்வார்கள். நீங்கள் சுற்றிப்பார்க்க வந்தீர்கள். அதை மட்டும் செய்யுங்கள்,'' என்றார் சற்று கோபமாக.
* பார்த்தீர்களா! தாயாக இருந்தாலும் கூட பொது இடத்தில் காட்டிய கண்டிப்பை! பொது இடங்களில் பந்தா காட்டும் அரசியல்வாதிகளும், நிர்வாகிகளின் குடும்பத்தினரும் இதைப் படித்த பிறகாவது திருந்த வேண்டும்.

No comments:

Post a Comment