Monday, August 25, 2014

அக்னிஹோத்ரம் தேவையான பொருட்கள்

அக்னிஹோத்ரம்
தேவையான பொருட்கள்
1.   செம்பினால் ஆன ஹோம குண்டம்
2.   காய்ந்த பசு வரட்டி
3.   பசு நெய்
4.   முழு சிவப்பு அரிசி
5.   சூரிய உதய, அஸ்தமன நேர அட்டவணை
செய்முறை
வரட்டியை நான்கு அல்லது மேற்பட்ட துண்டுகளாக உடைத்து, சிறிது நெய்யில் தோய்த்து, ஹோம குண்டத்தில் காற்று புகும்படி அடுக்கவும். ஒரு வரட்டியில் நெய் தடவி, தீக்குசியால் நெருப்பு மூட்டி ஹோமகுண்டதின் நடுவில் வைக்கவும். சிறிய விசிறியால் நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்ளலாம். வாயால் ஊத வேண்டாம். சூரிய உதய, அஸ்தமனத்திற்கு முன் நெருப்பு தயாராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
கையில் சிறிது சிவப்பு அரிசியை எடுத்து நெய்யில் தோய்த்து இரு பாகமாக பிரித்து வைத்துக்கொள்ளவும்.  சூரிய உதய, அஸ்தமன நேரம்போது, முதல் மந்திரம் உச்சரித்து ஸ்வாஹா எனும்போது அரிசியின் ஒரு பாகத்தை நெருப்பில் போடவும். பிறகு இரண்டாவது மந்திரம் சொல்லி அடுத்த பாகத்தைப் போடவும். (கை விரல்களில் அடங்கும் அளவு அரிசி இருந்தால் போதும்). நேரம் தவறி விட்டால், பலன் குறைவு.
மந்திரம்
சூரிய உதயத்தின் போது
1.   சூரியாய ஸ்வாஹா
(நெய்யில் கலந்த சிவப்பு அரிசியின் ஒரு பகுதியை நெருப்பில் போடவும்)
சூரியாய இதம் மம
2.   ப்ரஜா பதயே ஸ்வாஹா
(நெய்யில் கலந்த சிவப்பு அரிசியின் அடுத்த பகுதியை நெருப்பில் போடவும்)
   ப்ரஜா பதயே இதம் மம

சூரிய அஸ்தமனத்தின் போது
1.   அக்னயே ஸ்வாஹா
(நெய்யில் கலந்த சிவப்பு அரிசியின் ஒரு பகுதியை நெருப்பில் போடவும்)
   அக்னயே இதம் மம
2.   ப்ரஜா பதயே ஸ்வாஹா
(நெய்யில் கலந்த சிவப்பு அரிசியின் அடுத்த பகுதியை நெருப்பில் போடவும்)
   ப்ரஜா பதயே இதம் மம

வ்யாஹ்ருதி ஹோமம்
செய்முறை
·  அக்னிஹோத்ரம் செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த ஹோமம் செய்யலாம்.
·   அக்னிஹோத்ரதிற்கு நெருப்பு தயார் செய்வது போலவே செய்யவேண்டும்.
· பசு நெய் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. செம்பினால் செய்யப்பட்ட சிறிய கிண்ணத்தாலோ, சிறு கரண்டியாலோ (உத்திரியம்) நெய்யை விடலாம்.
- இந்த மந்திரம் 4 வரிகள் கொண்டது. ஒவ்வொரு வரியிலும், ஸ்வாஹா சொல்லும்போது சிறிது நெய் விட்டு, 4-வது வரியின் ஸ்வாஹாவின் போது முழுவதுமாக விட வேண்டும்.
· ஏதாவது புது செயலை ஆரம்பிக்கும் முன் செய்வது நல்ல பலனளிக்கும். ஒரு முறை தான் செய்ய வேண்டும்.
மந்திரம்
பூஹ் ஸ்வாஹா (ஒரு சொட்டு நெய் விடவும்), அக்னயே இதம் ந மம
புவஹ் ஸ்வாஹா (ஒரு சொட்டு நெய் விடவும்), வாயவே இதம் ந மம
ஸ்வஹ் ஸ்வாஹா (ஒரு சொட்டு நெய் விடவும்), சூர்யாய இதம் ந மம
பூர் புவஹ் ஸ்வஹ் ஸ்வாஹா (எடுத்த நெய் முழுவதும் விடவும்),
ப்ரஜா பதயே இதம் மம

ஓம் த்ரியம்பகம் ஹோமம்
செய்முறை
·     அக்னிஹோத்ரம் செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த ஹோமம் செய்யலாம். ஆரம்பத்திலும் முடிவிலும் வ்யாஹ்ருதி ஹோமம் செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
·   ஒரே மந்திரம், பலமுறை சொல்லலாம். ஒவ்வொரு முறையும் ஸ்வாஹாவிற்குப் பிறகு நெய் விட வேண்டும்.
· தினமும் 15 நிமிடம் முதல் 4 மணி நேரம் வரை செய்வது, நோயாளிகளுக்கும், தாவரங்களுக்கும் நல்ல பலன் தரும்.
· பௌர்ணமி, அம்மாவாசை தினங்களில் முழு தினமும் (12 அல்லது 24 மணி நேரம்) செய்வது, அதிக பலன் தரக்கூடியது.
·   ஒருவரே செய்ய வேண்டும் என்பதில்லை, ஆட்களை மாற்றிக் கொள்ளலாம்.
·   இரவில் குழந்தை தூங்கும் அறையில் செய்வது, குழந்தைக்கு நல்ல பலன் தரும்.
மந்திரம்
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத், ஸ்வாஹா
(ஒரு சொட்டு நெய் விடவும்).

1 comment: