Sunday, August 31, 2014

தோப்புக்கரணம்

தோப்புக்கரணம் 
நம் நாட்டில் விநாயகரை வழிபடும் போதும். 
படிக்கும் வயதில் ஆசிரியர் தண்டனையாக செய்ய சொல்வதும் “தோப்புக்கரணம்”.
தோப்புக்கரணத்தின் பயன்கள் 
மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. 
நாடிகள் சுத்தம் பெறுகின்றன. 
நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். 
தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
செய்முறை 
முதலில் கால்களுக்கு இடையில் ஒரு ஜான் அளவு இடவெளி விட்டு நிற்க வேண்டும். 
இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு. 
மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும் அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு. 
பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும். 
இவ்வாறு பத்து முறை தினமும் செய்தால் மாற்றம் உங்களுக்கே தெரியும். 
இதனை நம் முன்னோர்கள் பல வருடங்களுக்கு முன்னமே நமக்கு காட்டியுள்ளார்கள் ஆனால் நாம் அதை அலட்சியப்படுத்திவிட்டோம். 
இதனை வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்து அவன் பணம் சம்பாரிக்கிறான். 

No comments:

Post a Comment