Monday, September 15, 2014

எல்லாருமே கண்ணன் திருவடியை அடைந்தே ஆக வேண்டும்

ஆயர்பாடியில் தாயாக உள்ள பெண்கள் மோர் விற்கச் செல்கிறார்கள். தந்தையராக இருக்கும் ஆயர்கள் பசுக்களை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்கு சென்று விடுகிறார்கள். சிறுமிகள் மட்டும் வீட்டில் தனித்து இருக்கும் போது, கண்ணன், என்ன மாயம் செய்கிறானோ தெரியவில்லை. தன் பேரழகால் அவர்களைத் தன் பின்னால் வரச் செய்து விடுகிறான். அவன் செய்யும் குறும்பைக் கண்டிக்க வரும் பெண்களும் கூட, அவனைக் கண்டதும், சந்தோஷம் பொங்க தன்னையே மறந்து பின்னால் செல்கிறார்கள். இதை எண்ணிப் பார்த்தால் வியப்பு தான் மேலிடுகிறது என்று ஆயர்பாடி கண்ணனைப் பற்றி பாடியுள்ளார் பெரியாழ்வார். என்றேனும் ஒருநாள், எல்லாருமே கண்ணன் திருவடியை அடைந்தே ஆக வேண்டும். அது இப்போதே நடக்கட்டுமே என்று கண்ணன் தன் பக்தர்களை அழைக்கிறான் என்பதே இதில் புதைந்துள்ள தத்துவம்.

No comments:

Post a Comment