Monday, September 15, 2014

துர்க்கையின் பொருள்

துர்க்கையின் பொருள்
ஆடிப்பூரத்தன்று சிவாலய பிரகாரங்களில் வடக்கு நோக்கியுள்ள துர்க்கையை வழிபடுவது மிகவும் விசேஷம். துர்காவிற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
"துர்க்கம்' என்றால் "மலை', அரண், மலைக்கோட்டை, அகழி என பல பொருள்கள் உண்டு. எதிரிகள் ஒரு நாட்டிற்குள் புகாதபடி தடுப்பவை இவை. அதுபோல நமக்கு வரும் அகப்பகை, புறப்பகைகளை தடுத்துநிறுத்தும் வழிபாடு துர்க்கை வழிபாடாகும். வீரம் என்பதன் குறியீடாகத் திகழும் துர்க்கையின் திருவடிகளைப் பணிந்தோருக்குத் துன்பம் இல்லை. மனிதர்களின் பயத்தினைப் போக்கி, வெற்றியைத் தருபவள் இவளே. பலவீனமான எண்ணங்களை அடியோடு போக்குவதில் நிகரற்றவள். நல்லவர்களுக்கு நன்மைகளை அருள்வதோடு, அவர்களை தீயோரிடமிருந்து காப்பவளும் இவளே. "ஜெய் ஸ்ரீ துர்கா' என்று ஜபிப்பவரை அவள் காத்து அருள்புரிவாள். இத்தேவி வனதுர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வாலதுர்கா, தீபதுர்கா, லவண துர்கா, ஆசூரி துர்கா என "நவதுர்கா' எனப்படுகிறாள்.

No comments:

Post a Comment