Thursday, November 13, 2014

சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் (இவ்வாண்டு அக்.24- 29) அனுஷ்டிக்க வேண்டும். விரத நாட்களில் காலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். பின், முருகன் படத்துக்கு மாலை அணிவித்து "துதிப்போர்க்கு வல்வினை போம்" என்று துவங்கும் கந்தசஷ்டி கவசம் படிக்க வேண்டும். ஆறுநாளும் உபவாசம் என்று விரதநூல்கள் சொன்னாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்பதால், காலையில் மட்டும் பட்டினியாகவும், மதியம் சிறிது பச்சரிசி தயிர்ச்சாதமும், இரவில் பழம் அல்லது எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம். மதிய சாதத்திற்கு ஊறுகாய், வெங்காயம் சேர்க்காமல் காரம் குறைந்த காய்கறி ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம். ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேலுமயிலும் துணை போன்ற மந்திரங்களை மனதுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பணிக்குச் செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.
சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது கட்டுப்பாடு தான். உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும். மனம் கட்டுப்பட்டால் உலக வாழ்வில் துன்பமே இருக்காது. குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோயில்களில் தங்கி, விரதம் மேற்கொள்வது உடனடி பலன் தரும்.

No comments:

Post a Comment