Thursday, November 13, 2014

யாருக்கு சொர்க்கம்?

ஒருவன் தன் வாழ்நாளில் பலமுறை புராண, இதிகாச கதைகளை கூறி சொற்பொழிவாற்றி வந்தார். அவர் தான் இறந்த பிறகு எப்படியும் தனக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நம்பினார். வயது முதிர்ந்த நிலையில் ஒருநாள் அவர் இறந்து விட்டார்.

ஆனால் அவரை எமதூதர்கள், நரகத்தில் கொண்டு போய் சேர்த்தனர். இதனைக் கண்டதும் சொற்பொழிவாளருக்கு கடுமையான கோபம் வந்தது. சித்திரகுப்தா நான் சொன்ன கதைகளை கேட்டு பலரை எவ்வளவோ தீயவர்கள் திருந்தியிருக்கிறார்கள்.

பலரை திருத்தி நல்வழியில் நடக்கச் செய்த எனக்கு சொர்க்கம் இல்லையா? என்று ஆத்திரத்தோடு கேட்டார் அந்த சொற்பொழிவாளர். சித்திரகுப்தர் நீங்கள் கூறிய புராணக் கதைகளுக்கு அந்த இடத்திலேயே கூலியாக பணம் பெற்று கொண்டு விட்டீர்கள்.

மாறாக நீங்கள் சொன்ன புராணக்கதைகளைக் கோட்ட மனிதர்கள் எந்த கூலியும் பெறாமல் தீய செயல்களை கைவிட்டு இங்கு வந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு சொர்க்கம் வழங்குவது தான் சரியாக இருக்கும் என்று பதிலளித்தார்.

No comments:

Post a Comment