Wednesday, November 19, 2014

சபரிமலையில் சாஸ்தாவின் சந்நிதானத்துக்கு நிகராக கருதப்படுவது பதினெட்டுப்படி

சபரிமலையில் சாஸ்தாவின் சந்நிதானத்துக்கு நிகராக கருதப்படுவது பதினெட்டுப்படி. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இது தெய்வீக சக்தி மிக்கதாகும். மனித வாழ்வில் குறிக்கோளைப் போல, அதை அடையும் பாதையும் முக்கியமானது என்பதை இந்தப் படிகள் விளக்குகின்றன. ஒவ்வொரு படியும் ஒன்பது அங்குல அகலமும், அதே அளவு உயரமும் கொண்டதாகும். நீளம் ஐந்தடி. முதல் ஐந்து படிகள் இந்திரியங்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி) ஐந்தையும், ஆறு முதல் 13 வரையிலான படிகள் மனிதனின் பலவித ஆசைகளையும், பதினான்கு முதல் பதினாறு வரையுள்ள படிகள் மனிதனின் முக்குணங்களையும் (ஆணவம், கன்மம், மாயை), பதினேழாம்படி அறியாமையையும், பதினெட்டாம் படி அறிவுநிலையையும் குறிக்கிறது. ஒவ்வொரு படியில் ஏறும் போது ஐயப்ப பக்தர்கள் இந்த நிலைகளைக் கடந்து செல்வதாக ஐதீகம்.

No comments:

Post a Comment