Sunday, November 16, 2014

தசாவதாரத்தையும் கோவிந்த நாமம் குறிக்கும்

கோவிந்த நாமம் கிருஷ்ணருக்கு உரியது. இதற்கு "பசுக்களைக் காத்தவன்' என்பது பொருள். தசாவதாரத்தையும் இந்த கோவிந்த நாமம் குறிக்கும். வேதங்களைக் காத்தவன் என்னும் பொருளில் மச்ச அவதாரத்தையும், மலையைத் தாங்கி நின்றவன் என்னும் பொருளில் கூர்ம அவதாரத்தையும், பூமிதேவியைக் காத்தவன் என்பதால் வராகரையும், கோபம் தணிவதற்காக வணங்கப்பட்டவன் என்பதால் நரசிம்மரையும், பூமியை அளந்தவன் என்பதால் வாமனரையும், உலகம் முழுவதும் சுற்றியவன் என்னும் பொருளில் பரசுராமனைக் குறிக்கும். அஸ்திரம் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவன் என்னும் பொருளில் ராமனையும், யமுனை நதியை உழுதவன் என்னும் பொருளில் பலராம அவதாரத்தையும், உலகைக் காப்பவன் என்னும் பொருளில் கல்கி அவதாரத்தையும் குறிக்கும். அதனால் இந்த கோவிந்த நாமம் விசேஷமானதாக கருதப்படுகிறது

No comments:

Post a Comment