Thursday, November 27, 2014

கடவுளின் பட்டியல்

கடவுளின் பட்டியல்.
நள்ளிரவு நேரம், அவன் ஆழமான தூக்கத்தில் இருந்தான். அப்போது அறைக்குள் ஏதோ சத்தம். மெல்லக் கண் திறந்து பார்த்தான். ஒரு அழகான தேவதை அவன் அருகில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தது. அவன் அருகில் சென்றான். எதிரே விரித்து வைக்கப் பட்டிருந்த ஒரு தங்கப் புத்தகத்தில் மயிலிறகு கொண்டு எழுதிக் கொண்டிருந்த தேவதை நிமிர்ந்து பார்த்தது.
''என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?'' அவன் கேட்டான்.
''யாரெல்லாம் இறைவனை நேசிக்கிறார்கள் என்று பட்டியல் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றது தேவதை.
''அதில் என் பெயர் இருக்கிறதா?''என்று ஆவலுடன் கேட்டான்.
ஒன்றும் சொல்லாமல் உதட்டைப் பிதுக்கியது தேவதை.
அவன் மனம் உடைந்து விடவில்லை. கம்பீரமாக தேவதையைப் பார்த்து சொன்னான்,'' என்பெயரை சக மனிதர்களை நேசிப்பவர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்.''
கண் சிமிட்டும் நேரத்தில் மறைந்து விட்டது தேவதை.
மறுநாள் இரவு. மறுபடியும் வந்தது தேவதை.
''தனது அன்புக்குப் பாத்திரமானவர்களின் பெயர்கள் உள்ள பட்டியல் ஒன்றைக் கடவுள் என்னிடம் கொடுத்தார். 
அதை நீ பார்க்கின்றாயா?'' என்று கேட்டது. அவன் ஒன்றும் பேசவில்லை. தேவதை அதுவாகப் பட்டியலைத் திறந்து காண்பித்தது.
அதில் முதலில் இருந்து அவன் பெயர்தான்,..!
மனித தன்மை அறிந்து கொள்ள முதல் கடவுள் தன்மை அறிந்து கொண்டதாக முத்திரை குத்திகொள்கிறான் மனிதன். அதனால்தான் தனது கடவுளுக்காக மனிதனையே அவன் கொலையும் செய்ய தயங்குவது இல்லை. அவன் சக மனிதர்களை நேசிப்பவன் கடவுளை நேசிப்பவனே என்பதை அறியாத மூடனே.

No comments:

Post a Comment