Friday, November 14, 2014

மற்ற கிரகங்களை விட பலம் நிறைந்த ராகு - கேது

மற்ற கிரகங்களை விட பலம் நிறைந்த ராகு - கேது
ஒருவர் பிறக்கும் காலம், தேசம், திதி, வாரம், நட்சத்திரம் இவைகளும், பிறக்கும் சமயம் உள்ள கிரக நிலையும் பொருத்து அவரது வாழ்க்கை அமைகிறது என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். தனக்கென்று ராசி சக்கரத்தில் வீடு இல்லாமல் இருக்கும் சாயாக் கிரகங்கள் எனக் கூறப்படும் ராகுவும், கேதுவும் மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பலவிதமானவை.
ராகுவைப் போல் கொடுப்பார் இல்லை. கேதுவைப் போல் கெடுப்பார் இல்லை என்று வசனம் உண்டு. இவ்விருவரும் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் ராசியையும், அந்த ராசிநாதனையும் பொருத்தும், இவர்கள் எந்த கிரகங்களின் பார்வை பெறுகிறார்கள் என்பதை பொருத்தும் இவர்கள் கொடுக்கும் பலன்கள் மாறுபடுகின்றன.
அனேகமாக நல்ல இடங்களில் அமையாவிடில் இவற்றால் அதிகக் கெடுதல்கள் ஏற்படுகிறது. நவக்கிரகங்களிலே சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும் சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனைவிட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர்.
சந்திர, சூரியரையும், பலம் இழக்கும் படி, ஒளி இழக்கும்படி செய்ய இவர்களுக்கு ஆற்றல் உண்டு. ஒருவர் ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால் அவர்களை அரசனைப் போல உயர்த்தி விடுவானாம். ராகு நல்ல குடும்பம், செல்வாக்கு, அந்நிய மொழிகளில் தேர்ச்சி இவற்றை எல்லாம் தருவான்.
ஆனால் ராகு தோஷம் உடையவர்கள், மிகவும் கடுமையான பலன்களை சந்திக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர். விவாக தாமதம், களத்திர தோஷம், புத்திர தோஷம் இவற்றுக்கு காரணமாக இருக்கிறார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் கேது பலம் பெற்றிருந்தால் இக, பரம் இரண்டிலும் உள்ள சுகங்களை அனுபவிக்கச் செய்வான்.
சிவபக்தனான கேது தபஸ், தியானம் முதலியவற்றில் ஈடுபடுத்துபவனாகவும், உலக பந்தங்களிலிருந்து விடுவிப்பவனாகவும் அதே சமயம் சகல சவுபாக்கியங்களையும் அளிப்பவனாயும் விளங்குவான். ஜாதகத்தில் கேது நீசமாக, பலகீனமாக இருந்தால் மனநோய், விபத்துக்கள், தீய சேர்க்கை போன்ற பலவித கெடுதல்கள் ஏற்படும்.

No comments:

Post a Comment