Thursday, November 20, 2014

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம்
பாரதப் போர் முடிந்தபின் தருமன் கண்ணனிடம் கேட்டான்."கண்ணா, இவ்வளவு பாவங்களைப் புரிந்து இந்தப பாரதப் போரில் வெற்றிபெற்று நாட்டுக்கு மன்னனாகியுள்ளேனே . என் பாவங்களைப் போக்கிக் கொள்ள வழி சொல்."
கண்ணனும் சொன்னான்."போர்க்களத்தில் கடும்போர் புரிந்து அம்பு பட்டு உத்தராயண புண்யகாலத்துக்காகக் காத்திருக்கிறாரே உன் தாத்தா பீஷ்மர்.அவரிடம் செல். அவர் வார்த்தைகளைக் கேள் உன் பாவங்கள் விலக அவர் வழி சொல்வார்."என்று கூறி தருமனை பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் போர்க்களத்திற்கு அழைத்து வந்தான்.
அங்கே பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறு இறைவனைத் துதித்துக் கொண்டிருந்தார்.அங்கே சென்ற தருமன் தன பாவங்கள் தொலைய வழி கேட்டான். "அவனிடம் நீ செய்தவை பாவங்கள் என்றா எண்ணுகிறாய். இறைவனை உடன் வைத்துக் கொண்டிருக்கும் உனக்கு சந்தேகம் வரலாமா?அல்லது கண்ணன் உன் அருகிலிருப்பதால் அவன் இறைவன் என்ற எண்ணம் உனக்குத் தோன்றவில்லையா?என்று சொல்லி கண்ணனின் பெருமைகளைக் கூற ஆரம்பித்தார்.அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமம் என்றாயிற்று.இந்த நாமத்தைச் சொன்னால் சகல பாவங்களும் தீரும் என்று அவர் வாக்கிலேயே கேட்டான் தருமன். அத்துடன் பீஷ்மர் கூறிய இந்த சஹஸ்ரநாமத்தைக் கண்ணன் பீஷ்மரின் அருகே அமர்ந்து கேட்டான்.
ஒரு சுலோகம் "சங்க ப்ருந் நந்தகி சக்ரி சார்ங்க தன்வா கதாதரஹா "என்று பீஷ்மர் கூறியவுடன் கண்ணன் தன கைகளில் சங்கு, நந்தகி என்ற வாள், சக்கரம், சார்ங்கம் என்றவில், கதை என்ற ,பஞ்சாயுதங்களை ஏந்தி பீஷ்மருக்கு ஒரு போர்வீரனைப்போல் தரிசனம் கொடுத்தார்.
அந்த விஸ்வரூப தரிசனத்தைப் பார்த்தவாறே அந்த வீரன் தன உயிரை விட்டான்.இது ஒரு உண்மையான க்ஷத்ரிய வீரனுக்கு அவனது இறுதிக்காலம் முடியும்போது அளிக்கும் இராணுவ மரியாதை என்பதை நாம் புரிந்து கொள்ளவே இந்தக் காட்சியைக் காட்டி பீஷ்மருக்கு அருள் புரிந்தான் கண்ணன்.போரில் உயிர்நீத்த வீரனுக்கு மரியாதை செய்வதைக் கண்ணன் அன்றே நடத்திக் காட்டியுள்ளான்

No comments:

Post a Comment