Sunday, November 16, 2014

விஜயதசமி கொண்டாடுவது ஏன்?

ஆயிரம் ஆண்டுகள் பூலோகத்தில் தவம் செய்த மகிஷாசுரன், பிரம்மாவிடம் தனக்கு ஒரு பெண்ணால் மட்டுமே மரணம் நேரும் என்ற வரத்தைப் பெற்றான். ஆணவத்துடன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனுக்கு முடிவு கட்ட சிவன் தன்னுடைய ஆற்றலை சக்தியாக வெளிப்படுத்தினார். திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் தங்களின் ஆற்றல், ஆயுதங்களை அவளுக்கு வழங்கினர். அவள் துர்க்காதேவியாக சிம்மவாகனத்தில் புறப்பட்டாள். மகிஷாசுரன் தேவியை எதிர்த்து போரிட்டான். அவளோ திரிசூலத்தை வீசி அவனை வதம் செய்தாள். "ஜெயஜெயதேவி துர்காதேவி' என தேவலோகமே துர்காதேவியின் வெற்றியைக் கொண்டாடியது. இந்த வெற்றித்திருநாளே விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment