Saturday, December 20, 2014

முருகனின் மூவகை சக்திகள்

முருகப்பெருமானின் மூவகை சக்திகளாக இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி ஆகிய முச்சக்திகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள் "இச்சா சக்தி'' என்பது மனிதர்களின் விருப்ப ஆற்றலையும் அதனால் நாம் பெறும் உலகியல் சிற்றின்பங்களையும் குறிப்பிடுகின்றன.

இதன் குறியீடே வள்ளியம்மை. "கிரியா சக்தி'' என்பது மனிதர்களின் செயலாற்றல் வெளிப்பாட்டையும் அதனால் நாம் பெறும் பரலோக சுகமான சொர்க்கத்தையும் குறிப்பிடுகின்றது. இதன் குறியீடே தெய்வானை.

"ஞான சக்தி'' என்பது மனிதர்களின் அறிவாற்றலையும் அதன் ஆழ்ந்து, அகன்ற, நுண்ணிய மெய்ஞானத்திறனையும், அதனால் நாம் பெறும் முக்தி எனும் வீடு பேற்றால் வரும் பேரின்ப சுகத்தையும் குறிப்பிடுகின்றது. இதன் குறியீடே முருகனின் கையில் உள்ள வேலாகும்''.

No comments:

Post a Comment