Friday, December 19, 2014

ஐயப்ப பக்தர்கள் வண்ண ஆடைகளை ஏன் கட்ட வேண்டும்

மாலை அணிவது சபரிமலைக்கு வரும் ஐயப்ப சாமிகளின் உடைகள் கருப்பு வண்ணத்தில் இருக்கலாம். நீல நிறமாக இருக்கலாம். மஞ்சள் ஆடையும் நல்லதே! சிலர் பச்சை நிற வேஷ்டி கட்டுவதுண்டு. காவி நிற உடை விலகக்கப்பட வேண்டும்.

கருப்பு வண்ணம் அணிவதால் சனீஸ்வரரையும், நீல வண்ணம் அணிவதால் தர்ம சாஸ்தாவையும், பொன் வண்ணமாக அணிவதால் ஸ்ரீபரமேஸ்வரரையும், பச்சை வண்ணம் ஸ்ரீமந் நாராயணரையும், திருப்திபடுத்தும், இவை தற்காலிக சந்நியாசத்தின் அடையாளங்கள். காவி நிற உடை என்பது நிரந்தர சந்நியாசத்தின் அடையாளம்.

காவி கட்டியவன் மீண்டும் இல்லறத்துக்குத் திரும்பக் கூடாது என்றொரு விதி உண்டு. இதனை யாரும் மதிப்பது இல்லை. கொடிய கானகத்தின் நடுவே, பச்சை இலைகளுக்கு நடுவே நடந்து செல்லும்போது அடையாளம் காட்டுவது இவ்வண்ண ஆடைகளே ஆகும். எனவேதான் கருப்பு, நீலநிற ஆடைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

பச்சை வண்ண ஆடை பெரும்பாலும் அணியப்படுவது இல்லை. இதோடு தத்துவ ரீதியாக இன்னுமொரு விளக்கமும் சொல்லப்படுவதுண்டு. கருப்பு இருள், சிலர் இதனைக் காத்து கருப்பு என்று எழுதுவதுண்டு. இது தவறு. கருப்பு என்றால் கோபம் என்பது பொருளாகும். இருள் என்பது அறியாமை, அஞ்ஞானம் என்றும் சொல்வதுண்டு. நாங்கள் அறியாதவர்கள். அஞ்ஞானம் நிரம்பப் பெற்றவர்கள்.

எனவே பரிசுத்த பரம்பொருளான உன்னைச் சரண் அடைகின்றோம் என்று காட்டவே கருப்பும், அதை ஒட்டிய வண்ணமான நீலமும் உபயோகிக்கப்படுகிறது. சனிஸ்வரனுக்கு பிரியமான வண்ணங்கள் கருப்பும், நீலமும். இதனை அணிவதால் சனியின் திருப்திக்கும் பாத்திரங்களாவார்கள். அதன் பிறகு பழக்கத்தை மாற்ற சில அறியாதவர்களினால், பச்சையும், காவியும், பொன் நிறமும் பயன்படுத்தப்பட்டன.

இவை ஏற்கத்தக்கதல்ல. நிரந்தரத் துறவின் அடையாளமான காவியைக் குடும்பஸ்தர்கள் அணிந்து விட்டுக் களைவது நல்லதல்ல. இது விதியை மீறிய செயல். மஞ்சள் வண்ணமும், சிவப்பு வண்ணமும் அம்பிக்கையைத் தவிர வேறு எந்த இறைவனுக்கும் பொருத்தமான தன்று. பொன் வண்ணம் வீட்டிலிருந்து கொண்டே துறவு மனப்பான்மையுடன் நடந்து கொள்பவர்களுக்கு உயர்ந்தது.

ஐயப்ப பக்தர்கள் மலைக்குப் போகும் முன், விரதத்தைக் கடைப்பிடிக்கும்போது, அசுத்தமானவர்கள் அவர்களை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்ற நினைவூட்டுதலுக்காகவே வண்ணங்களில் உடைகளை அணிகிறார்கள் என்பது முக்கியமானது.*

No comments:

Post a Comment