Friday, December 19, 2014

எந்த நாளில் மாலை அணிவது சிறந்தது

சபரிமலை செல்லவிரும்பும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் நாள், நட்சத்திரம் திதி ஆகியவை பார்க்கத் தேவை இல்லை. குளிர் காலத்தின் தொடக்க நாள் அது.

உடலை அப்போதிருந்தே தயார்படுத்திக் கொண்டால்தான் குளிர் நிரம்பிய மார்கழி, தை போன்ற மாதங்களில் மலைப் பிரதேசத்தில் நம் உடல் ஆரோக்கியமாக விளங்கும். இதை கருத்தில் கொண்டே கார்த்திகை மாதம் மாலை அணிவிக்கிறார்கள்.

கார்த்திகை மாதம் முதல் தேதி தவறினால் ஏதாவது ஒரு புதன் கிழமையிலோ, சனிக்கிழமையிலோ அல்லது உத்தர நாட்சத்திரம் வரும் நாளிலேயோ மாலை அணியலாம். புதன் என்ற கிரகத்துக்கு உரிய அதிபதி ஸ்ரீமஹாவிஷ்ணு. இவர் தர்ம சாஸ்தாவின் அன்னையாவார்.

அவரை நினைவூட்டும் விதமாகவும், வழிபடும் விதமாகவும் புதன்கிழமை அமைகிறது. சனிக்கிழமையில் உத்தர நட்சத்திரத்தில் தர்ம சாஸ்தாவின் ஜனனம் பந்தளத்தின் மன்னன் ராஜசேகரன் பார்க்கும் தினத்தில் பம்பையாற்றில் நிகழ்ந்தது. எனவே அந்நாளில் மாலை அணிவதும் சிறப்பாகும்.

No comments:

Post a Comment