Tuesday, January 6, 2015

விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப் படாத கடவுளை எப்படி ஏற்றுக் கொள்ளுவது ?

விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப் படாத கடவுளை எப்படி ஏற்றுக் கொள்ளுவது ?
அருட்சத்தி என்பது பொதுவான மனித அறிவின் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருட்சத்தியால் மனித வாழ்வின் அனைத்து வகையான தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் சரி செய்து கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் மனித வாழ்வில் அறிவியலால் நலப்படுத்த முடியாத அனைத்து வகையான குறைகளையும் அருட்சத்தியால் நலப்படுத்த முடியும்.
“மனித வாழ்வு பிறப்பில் துவங்கி இறப்பில் முடிவடைகின்ற ஒன்றா ?”, 
“மனித வாழ்வு பிறப்புக்கு முன் எப்படி யிருந்தது? இறப்புக்குப் பிறகு எப்படியிருக்கும் ?”
“இறப்பு உடலுக்கு முடிவை அளிக்கிறதா ? அல்லது உயிருக்கு முடிவையளிக்கிறதா ?” ,
“மனிதன் ஏன் பிறக்கிறான் ? ஏன் இறக்கிறான்? ஏன் தொல்லையுறுகிறான் ? “ ……..,
என்ற வினாக்களுக்கு விடை காணும் முயற்சியில் இன்று வரை மேல்நாட்டவரின் விஞ்ஞானம் ஈடுபடவே இல்லை. எங்கோ ஈடுபட்ட சிலரும் சிறிதளவு கூட வெற்றி பெறவில்லை.
ஆனால், தமிழர்களின் அறிவியல் சாதனைகள் வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே முழுமை பெற்று விட்டன. அந்த முழுமையினால் தமிழர்கள் மனிதன் மண்ணிலோ விண்ணிலோ ஆட்சி செய்வதால் பயனில்லை. மனிதன் தன்னைத்தானே ஆட்சி புரிவதில்தான் பயனுண்டு என்று முடிவு கட்டினர். இந்த முடிவிற்கேற்ப உண்டாக்கப்பட்டவைகளே தெய்வீகக்கலைகள், கடவுட்கலைகள், சமய வாழ்வு, சித்தர் தத்துவங்கள்... முதலியவைகள்.
ஞாலகுரு சித்தர் கருவூறார் , ஞானாச்சாரியார்
'அன்பு சித்தர்'

No comments:

Post a Comment